ஆசியா செய்தி

இம்ரான் கான் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பிறப்பித்த உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4,000 பேரை போலீசார் கைதுசெய்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி