மீண்டும் UNP + SJB இணைப்பா ?
இரண்டாக பிளவு பட்டு கைக்கு எட்டிய வெற்றிகளை தாரை வார்த்த இலங்கையின் பழம் பெரும் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு சிலரின் கருத்தாக இருந்த இவ்விடயம் இரு தலைவர்களையும் ஒன்று சேர்த்து பேச வைக்கும் முயற்சியாக பரிணமித்து உள்ளதாக இக்கட்சிகளின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் ராஜகருணா உட்பட சிலர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபந்தனைகளுடன் இவ்விடயத்தை அணுகுவதாக தெரிவித்துள்ள அதே வேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு சென்று உள்ளதால் அவர் நாடு திரும்பிய பின் இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க உரிய தரதரப்பினர் தயாராக இருப்பதாகவும் தெரிய வருகிறது.
எனினும் இக்கூட்டின் தலைமைப்பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.