மியன்மாரில் சிக்கித் தவித்த முப்பத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மீட்பு!
மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு மியான்மரில் சிக்கித் தவித்த 32 இலங்கை பிரஜைகள் வெற்றிகரமான, ஒருங்கிணைந்த செயல்முறையின் பின்னர் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு, மனித கடத்தலுக்கு பலியாகிவிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு அவசர பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.