இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற காலநிலை – வெள்ளப் பெருக்கு – மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மல்வத்து ஓயா உள்ளிட்ட 12 ஆறுகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மல்வத்து ஓயா, கலா ஓயா, கனகராயன் ஆறு, மா ஓயா, பரங்கி ஆறு, மகாவலி கங்கை, மாதுறு ஓயா மற்றும் யான் ஓயா உள்ளிட்டவற்றுக்கு வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மடூல்சீமையில் இருந்து குருவிகொல்ல, பிட்டமாறுவ, மற்றும் மெட்டிக்காத்தன்ன செல்லும் பிரதான வீதியில் கல்லுல்ல பாலத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!