பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் பாரிய தீ விபத்து : ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதம்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடிசைப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.இச்சம்பவம் நவம்பர் 24ஆம் திகதியன்று நிகழ்ந்தது.
கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீயில் அழிந்ததாக மணிலா தீயணைப்புத்துறை தெரிவித்தது.
அங்குள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.
குடிசை வீடுகள் அருகருகில் கட்டப்பட்டிருந்ததால் தீ மிக எளிதில் மளமளவென பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவத்தில் காயமடைந்தோர் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அப்பகுதியில் ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் வசித்து வந்ததாக தீயணைப்புத்துறை கூறியது.
(Visited 37 times, 1 visits today)