வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் ஏற்படக்கூடிய வளர்ச்சிகள் காரணமாக 2024 நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மல்வத்து, கலா ஓயா, கனகராயனாறு, பரங்கி ஆறு, மா ஓயா, யான் ஓயா, மஹாவலி கங்கை, மாதுரு ஓயா, முந்தேனியாறு போன்ற ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய தாழ்வான பிரதேசங்களில் சில வெள்ள நிலைமைகள் ஏற்படக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக நவம்பர் 25ஆம் திகதி முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களும் பயணிகளும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Visited 2 times, 2 visits today)