ஆஸ்திரேலியாவில் திடீரென பச்சை நிறமாக மாறிய கால்வாய் – மக்களுக்கு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் – மெல்போர்னின் மேற்குப் பகுதியில் உள்ள கால்வாயில் பச்சை நிறமாக மாறியிருப்பதால், அருகில் வசிக்கும் மக்கள் தண்ணீரில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Cruickshank Parkஇல் அமைந்துள்ள Stone கால்வாயில் உள்ள நீர் பிரகாசமான பச்சை நிறமாக மாறியதன் காரணமாக சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை (EPA) விக்டோரியா மாநிலத்திற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிவுநீர் மற்றும் நிலத்தடி குழாய்களில் உள்ள கசிவுகள் மற்றும் அடைப்புகளை சரிபார்க்க பிளம்பர்கள் பயன்படுத்தும் பிரகாசமான சாயமான ஃப்ளோரசெசின் கசிவு காரணமாக நீரில் இந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fluorescein உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அந்த கால்வாயில் உள்ள நீரிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சவுத் பேங்க் அருகே உள்ள யர்ரா ஆற்றில் கடந்த ஆண்டும் இதுபோன்ற ஃப்ளோரசின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அதிக செறிவூட்டப்பட்ட சாயத்துடன் பணிபுரியும் போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (EPA) பிளம்பர்களையும் விற்பனையாளர்களையும் கேட்டுக்கொள்கிறது.