செய்தி விளையாட்டு

AUSvsIND – இரண்டாம் நாள் முடிவில் 218 ஓட்டங்கள் முன்னிலையில் இந்திய அணி

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர்.

ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை.

இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்தும் கே.எல். ராகுல் 153 பந்துகளில் 62 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி