பணியாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்த சீனா முன்னெடுத்துள்ள ஆச்சரிய திட்டம்!
சீனாவில் பணியாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்நோக்கில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது பணியாளர்கள் டேட்டிங் எப் மூலம் ஒரு புதிய கூட்டாளரை தெரிவு செய்வதற்கும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை வகுத்துள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான Insta360 என்ற நிறுவனமே இதனை அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனம் தனது உள் டேட்டிங் தளத்தில் நிறுவனத்திற்கு வெளியே ஒரு தனி நபரை அறிமுகப்படுத்தும். இதற்காக 66 யுவான் (தோராயமாக ₹770) தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.
மூன்று மாதங்களுக்கு ஒரு உறவை வெற்றிகரமாகப் பொருத்தி பராமரிக்கும் பணியாளர்கள் பெரிய வெகுமதிக்கு தகுதியுடையவர்களாவார்கள். இதற்காக 1,000 யுவான் வழங்கப்படும்.
இந்த திட்டம் ஏற்கனவே உற்சாகமான பங்கேற்பைக் கண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.