அணுவாயுதப் போரைத் தவிர்க்க போராடும் ரஷ்யா
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணுவாயுதப் போரைத் தவிர்க்க முடிந்தவரை முயற்சி செய்வதாக ரஷ்யா கூறியுள்ளது.
நெடுந்தூரம் பாயக்கூடிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா, உக்ரேனுக்கு அனுமதியளித்தது.
உக்ரேனும் பாய்ச்சத் தொடங்கியது. அதையடுத்து ரஷ்யா அணுவாயுத மிரட்டலை விடுத்துள்ளது.
மேலும் ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரேனை நோக்கிச் செலுத்தியுள்ளது.
இது போரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.
உக்ரேனின் டிநிப்ரோ எனும் நகருக்குள் அதிகாலை வேளையில் நெடுந்தூரம் பாயக்கூடிய ஏவுகணை செலுத்தப்பட்டதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது.
2022இல் ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை அத்தகைய ஏவுகணை பாய்ச்சப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)