செய்தி விளையாட்டு

மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்’களுக்கான திகதிகளை அறிவித்துள்ளது.

மூன்று கட்ட ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி மே 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2026 சீசனை மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், 2027 சீசனை மார்ச் 14 முதல் மே 30 வரையிலும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கையை விட எதிர்வரும் இரண்டு கட்டங்களில் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் எண்ணிக்கை 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2027 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 94 போட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் 74 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!