இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஐஸ்லாந்தில் 7வது முறையாக வெடித்து சிதறிய எரிமலை! எரிவாயு எச்சரிக்கை விடுப்பு

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக வெடித்துச் சிதறியுள்ளது.

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலையே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.

ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, எரிமலையானது நேற்று மாலை வெடிக்கத் தொடங்கி நிலையில் தொடர்ந்து இரவு 11.14 மணிக்கு சுமார் 3 கி.மீ (1.8 மைல்) நீளமுள்ள பிளவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஒகஸ்ட் மாதத்தில் வெடித்ததை விட இது கணிசமாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இருப்பினும் கிரிண்டாவிக் நகரம் உள்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் எரிவாயு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே 50 கி.மீ(30 மைல்) தொலைவில் வசிக்கும் சுமார் 3,800 மக்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!