பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் : 08 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை ஏற்றிச் சென்ற பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மருத்துவமனையில் குறைந்தது ஐந்து பயணிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை ஷியாக்களுக்கும் இடையிலான மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பல வாரங்களாக மூடியிருந்த ஒரு முக்கிய நெடுஞ்சாலையை அதிகாரிகள் மீண்டும் திறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு சமீபத்திய வன்முறைகள் அதிகரித்துள்ளன.
(Visited 26 times, 1 visits today)