தனிப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வடகொரியா – ரஷ்யா ஒப்புதல்
வடகொரியா -ரஷ்யா இடையே வர்த்தகம், பொருளியல், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகள் தொடர்பான சந்திப்புகள் நிகழந்தன.
அதற்குப் பிறகு ரஷ்யாவும் வடகொரியாவும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்துள்ளது.
வடகொரிய ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் சில தகவல்கள் இருந்தபோதிலும், ரஷ்ய செய்தி ஊடகமான ‘டாஸ்’ வெளியிட்ட செய்திக் குறிப்பில் இருநாடுகளுக்கு இடையே தனிப்பட்ட சிறிய விமானங்கள் இயக்க வடகொரியாவும் ரஷ்யாவும் ஒப்புகொண்டதாக ரஷ்ய இயற்கை வள அமைச்சு தெரிவித்ததாகக் குறிப்பிட்டது.
இவ்வாண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே பயணம் மேற்கொண்ட சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 5,000க்கும் அதிகமாக இருக்கும் என அது கூறியது.
மேலும், அவர்களில் 70 சதவீத்த்திற்கும் மேலானோர் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் கூறியது.