ரஷ்யாவிற்கு கூடுதல் பீரங்கி அமைப்புகளை வழங்கிய வடகொரியா!

உக்ரைனுக்கு எதிரான அதன் போர் முயற்சிகளை ஆதரிப்பதற்காக வட கொரியா சமீபத்தில் ரஷ்யாவிற்கு கூடுதல் பீரங்கி அமைப்புகளை வழங்கியதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க உக்ரைனை அனுமதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் முடிவு போரின் அடுத்த கட்ட நகர்வை பிரதிபலிக்கிறது.
முன்னதாக வடகொரியா ரஷ்யாவிற்கு ஆதரவாக துருப்புக்களை களமிறக்கியதே பைடனின்முடிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அணுவாயுத மோதல் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் வடகொரியா மேலும் சில ஆயுதங்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 21 times, 1 visits today)