அணுவாயுத தாக்குதல் பதற்றங்களுக்கு மத்தியில் மாயமான புட்டின்!
அணுவாயுத அச்சுறுத்தல்களை வெளியிட்டதை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 12 நாட்களாக இடம்பெற்று வரும் பதற்றங்களுக்கு மத்தியில் அவர் ஹைடெக் பதுங்கு குழிக்குள் அடைக்கப்பட்டாரா, அல்லது மற்றொரு சுற்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாரா, ரகசிய விடுமுறை எடுத்தாரா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உக்ரைனுடனான போர் ஒரு புதிய சுற்றுக்குள் நுழையும் போது, அவர் என்ன செய்கிறார் என்பது வெளிப்படையாக அவரது பாதுகாப்பு மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் ஒரு சிறிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும்” என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் அணுக் கோட்பாட்டின் புதிய பதிப்பில் கையெழுத்திட்டதாக கிரெம்ளின் அறிவித்தபோது, புடின் பார்வைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.