உலகிலேயே அதிக காற்று மாசுபாடான நகரமாகிய புதுடெல்லி – வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுபாட்டிற்கமைய, ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவு சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக காற்று மாசு உள்ள நகரமாக புதுடெல்லி இருப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்றின் தரக் குறியீட்டின் சராசரி காற்றின் தர மதிப்பு 100-க்கும் குறைவாக இருக்க வேண்டும், ஆனால் டெல்லியில் 1000ஐத் தாண்டும் அபாயகரமான நிலையை எட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நச்சு வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் நீர் துளிகளை தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 33 times, 1 visits today)