ஐரோப்பா

பிரித்தானியாவில் ஏமாற்றப்படும் முதியவர்கள் : களமிறக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்பம்!

பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனமான விர்ஜின் மீடியா O2, பாதிக்கப்படக்கூடிய நபர்களை குறிவைத்து இட்ம்பெறும் மோசடிகள்  அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை  எதிர்த்துப் போராடும் நோக்கில், டெய்சி என்ற புதிய AI-இயங்கும் சாட்போட்  வெளியிட்டுள்ளது.

ஒரு புத்திசாலி,  நகைச்சுவையான பாட்டியின் உரையாடல் பாணியைப் பிரதிபலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெய்சி நிகழ்நேரத்தில் மோசடி செய்பவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கிறார்.  அவர்களின் நேரத்தை வீணடித்து, அவர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கிறார்.

டெய்சி மோசடி அழைப்புகளுக்கு பதிலளிக்கிறார் மற்றும் மோசடி செய்பவர்களை நீண்ட உரையாடல்களுக்கு வழிநடத்துகிறார், இறுதியில் வெற்றிகரமான மோசடிகளின் எண்ணிக்கையை குறைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டெய்சி குறிப்பாக முதியவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வயதான நபர்கள் பெரும்பாலும் குறைந்த தொழில்நுட்ப ஆர்வலராக இருப்பதன் காரணமாக மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகக் காணப்படுகின்றனர். இதனால் மோசடியாளர்கள் அவர்களை இலகுவாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!