லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ; ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் பலி !

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ரசல் நபா பகுதியில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.
(Visited 16 times, 1 visits today)