வியட்நாமில் DNA சோதனையால் ஏற்பட்ட குழப்பம் : உடைந்த குடும்பம்!
வியட்நாமில் மருத்துவர்கள் செய்த ஒரு பிழையின் காரணமாக குடும்பம் ஒன்று சிதைந்துபோனதை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமை சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தையின் சாயல்மீது சந்தேகம் அடைந்து டி.என்.ஏ பரிசோதனைய மேற்கொண்டுள்ளார்.
அவர் எதிர்பார்த்ததுபோலவே டி.என்,ஏ பரிசோதனை தவறான முடிவை காண்பித்துள்ளது. இதனையடுத்து தனது துணைவி தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குறிப்பிட்டு அவரை விட்டு பிரிந்து வாழ முடிவெடித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணும் தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி வாழந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையை வேறு ஒரு பாடசாலையில் சேர்த்துள்ள அவர் அங்கு அவளுக்கு ஒரு நெருங்கிய தோழி கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே தினத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவர்களுடைய பெற்றோரகளும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.
அப்போது மற்றைய பெண்ணின் அம்மா தனது குழந்தையின் சாயலுடன் ஒத்துபோவதை அவர் உணர்ந்துள்ளார். இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். பரிசோதனை முடிவுகளும் ஒத்துபோக வைத்திய நிர்வாகம் இழைத்த தவறு வெளியில் வந்துள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.