நாசாவிற்குப் போட்டியாக சீனா போடும் அதிரடி திட்டம் – உருவாகும் புதிய விண்வெளி மையம்
நாசாவிற்குப் போட்டியாக விண்வெளியில் சீனா டியாங்காங் விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றது.
அங்கு பணியாற்றிவரும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உபகரனங்கள் சரக்கு விண்கலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்திய நேரப்படி, நேற்றிரவு ஒன்பதே முக்கால் மணிக்கு, ராக்கெட் மூலம் ஏவப்பட்ட டியாஞ்சோ – 8 சரக்கு விண்கலம், இரண்டேகால் மணி நேரத்தில் சீன விண்வெளி மையத்துடன் சென்றிணைந்தது.
நிலவின் நிலப்பரப்பில் குடியிருப்புகளை அமைப்பதற்காக சீன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிரத்யேக செங்கலும் பூமியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
(Visited 41 times, 1 visits today)





