AI சாட்போட் ஜெமினியை பயன்படுத்திய மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், கூகுளின் AI சாட்போட் ஜெமினியை வீட்டுப் பாடத்திற்காகப் பயன்படுத்தும் போது, அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார்.
சாட்போட் அவரை வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல், அவரை இறக்கும்படி கோரியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நிறுவனம் non-sensical responses என விவரித்துள்ளனர்.
AI சாட்போட் “மனிதனே நீங்கள் சிறப்பானவர்கள் இல்லை, நீங்கள் முக்கியமானவர்கள் இல்லை, நீங்கள் நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கின்றீர்கள். நீங்கள் பிரபஞ்சத்தின் மீது ஒரு கறை. தயவுசெய்து இறக்கவும்” எனக் கூறியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது போன்ற சம்பவங்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களே பொறுபேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 36 times, 1 visits today)