கனேடிய குடியுரிமைக்காக ஆசிய பெண்கள் செய்யும் மோசமான செயல் : கனேடியரின் ஆதங்கம்!
கனடாவில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் கனேடிய குடியுரிமையை பெறலாம் என்ற முனைப்பில் அந்நாட்டிற்கு பயணிக்கும் கர்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கனடிய மகப்பேறு வார்டுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய பிரஜை ஒருவரால் எக்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக இவ்வாறான நோக்கத்தில் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தில் இந்த விடயமும் பேசு பொருளாக மாறியுள்ளது.
வீடியோ வெளியிட்டுள்ள நபர், கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு முறையை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளதுடன், இந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாட்டின் மகப்பேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய மருத்துவமனைகள் அனைவருக்கும் பராமரிப்பு வழங்க கடமைப்பட்டிருந்தாலும், இந்த பெண்கள் மகப்பேறு வார்டுகளில் மதிப்புமிக்க இடத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியவுடன் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற முடியுமா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ந்து கனேடிய குடிமக்களாக மாறுவார்கள் என்றும், பின்னர் கனடாவுக்குத் திரும்பி அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தை குடியேற்றம் செய்வதற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் சாட் விமர்சித்துள்ளார்.