செய்தி

குழந்தைகள் உட்பட சட்டவிரோதக் குடியேறிகள் 70 பேர் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் தென்பகுதியில் சட்டவிரோதக் குடியேறிகள் 70 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் நவம்பர் 16ஆம் இகதி தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டோரில் 30 குழந்தைகளும் அடங்குவர்.அவர்கள் அனைவரும் மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்யாக்கள் என நம்பப்படுகிறது.

ரோஹிங்யா முஸ்லிம்களைத் தெற்கு ஆசியாவிலிருந்து வந்த, தேவையின்றித் தலையிட்டுத் தொந்தரவு செய்பவர்களாகக் கருதுகிறது மியன்மார். அதனால் மியன்மாரில் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுவதுடன் ரோஹிங்யாக்கள் தீங்குகளுக்கும் ஆளாகின்றனர்.

“முதற்கட்ட விசாரணையில், தாங்கள் மியன்மாரைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்று கூறிய அவர்கள் மலேசியா அல்லது இந்தோனீசியா நோக்கிச் செல்வதாகக் கூறினர்,” என்று தாய்லாந்துக் காவல்துறை கூறியது.

கடந்த சில ஆண்டுகளாக ரொஹிங்யாக்கள் சிறு படகுகளில் தாய்லாந்து, பங்ளாதேஷ் போன்ற அண்டை நாடுகளை நோக்கிச் செல்வது வழக்கமாகியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவிற்கும் இந்தோனீசியாவிற்கும் அவர்கள் செல்ல முயல்கின்றனர்.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடல் அமைதியாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் அவ்வாறு பயணம் செய்கின்றனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய தாய்லாந்து அதிகாரிகள், “சட்டவிரோதமாகத் தாய்லாந்திற்குள் நுழைந்த அவர்கள் ரோஹிங்யாக்கள் என்பதையோ மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்பதையோ இன்னும் முடிவு செய்ய இயலவில்லை,” என்று கூறினர்.அதுகுறித்த விசாரணை தொடர்வதாகக் கூறப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி