ஐரோப்பா

ஸ்பெயினை உலுக்கிய தீ விபத்து – முதியோர் இல்லத்தில் 10 பேர் பலி

ஸ்பெயினின் வடபகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் சிலர் புகை சுவாசித்ததற்குச் சிகிச்சை நாடுவதாகவும் வட்டார அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் இல்லத்தின் குடியிருப்பாளர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வில்லாபிராங்கா டெல் எப்ரோ (Villafranca del Ebro) வட்டாரத்திலுள்ள இல்லத்தில் ஸ்பெயினின் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலிருந்து முதியோர் இல்லத்துக்குச் சென்ற தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைப்பதற்குச் சில மணிநேரம் எடுத்துக்கொண்டனர்.

முதியோர் இல்லத்தில் 82 பேர் வசித்ததாகத் தெரிகிறது. எனினும் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று விசாரிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்