அநுர அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கை மக்கள் – நன்றி தெரிவித்த கட்சி
பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி நேற்று பிற்பகல் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியபோது, காலாவதியான பழைய அரசியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுப் பணத்தில் தங்கியிருக்கும் குடும்ப ஆட்சி, மேல்தட்டு ஆதிக்க அரசியல் முடிந்துவிட்டதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஐம்பது நாட்களில் தேசிய மக்கள் படையின் நடைமுறையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அந்த நம்பிக்கையை பாதுகாப்பதாகவும் செயலாளர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மக்களால் வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு என்ற அதீத அதிகாரத்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய வலுவான பொறுப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.