செய்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது T20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார்.

திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் 10 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

ஸ்டபஸ், மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தது. மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் T20 தொடரை 3-1 என கைப்பற்றியது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி