தென் அமெரிக்கா

பிரேசிலில் உச்ச நீதிமன்றம் அருகே குண்டுவெடிப்பு; ஒருவர் மரணம்!

பிரேசிலில் நவம்பர் 13ஆம் திகதியன்று இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பிரேசிலின் தலைநகரம் பிரேசிலியாவில் உள்ள முக்கிய சின்னமான ‘பிளாசா ஆஃப் தி த்ரீ பவர்ஸ்’ எனும் இடத்தில் குண்டுகள் வெடித்தன.

குண்டுவெடிப்புகள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றக் கட்டடம், அதிபர் மாளிகை அருகில் நிகழ்ந்தன.இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

முதல் குண்டுவெடிப்பு பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.உச்ச நீதிமன்றத்தில் இருந்தோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டுகள் வெடிப்பதற்குச் சிறிது நேரம் முன்பு பிரேசிலிய அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அதிபர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சில நாள்களில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 57 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த
error: Content is protected !!