இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு – 90,000 உத்தியோகத்தர்கள் கடமையில்
இன்று இடம்பெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
63, 145 பொலிஸார் நேரடியாகத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 3, 200 உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு கடமைகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் பொலிஸாருடன் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று 12, 000 இற்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 3000 இற்கும் அதிகமான காவல்துறை குழுக்கள் நடமாடும் சோதனை நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.