ஆசியா செய்தி

சிங்கப்பூரில் பெற்றோர் விடுப்பில் மாற்றம் – அமுலாகும் புதிய நடைமுறை

சிங்கப்பூரில் அரசாங்கச் செலவில் வழங்கப்படும் பெற்றோருக்கான விடுப்பு 20 வாரத்திலிருந்து 30 வாரத்துக்கு அதிகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குடும்பத் தேவைகளை நிறைவு செய்ய இது உதவும் எனவும் தற்போது வேலை செய்யும் தாய்மார்களுக்கு 16 வாரப் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் அதில் 4 வாரங்களைக் கணவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.

மாற்றத்தின்வழி பேறுகால விடுப்புடன் சேர்த்து 10 வாரம் பெற்றோர் பகிர்ந்து கொள்ளும் விடுப்பு வழங்கப்படும். அது 2 கட்டங்களில் அமல்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 6 வாரம். 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 10 வாரமாகும்.

அதனுடன் கட்டாய தந்தையர் விடுப்பு 4 வாரங்களுக்கு அதிகரிக்கப்படும். தற்போது தந்தையருக்கு 2 வார விடுப்பு வழங்கப்படுகிறது.

அவர்கள் முதலாளிகளின் அனுமதியுடன் கூடுதலாக 2 வார விடுப்பு எடுத்துக்கொள்ளமுடியும் என குறிப்பிடப்படுகின்றது.

குற்ற உணர்வு, வேலையிடத்தில் பாகுபாடு, வாய்ப்புகளை இழக்கக்கூடுமோ என்ற அச்சம் விடுப்பை எடுப்பதில் தடையை ஏற்படுத்தக்கூடும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.

நீடிக்கப்பட்ட பெற்றோர் விடுப்பைப் பயன்படுத்த வேலையிடக் கலாசாரமும் சமுதாயச் சூழலும் முக்கிய பங்காற்றுவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி