இந்தியாவில் உச்சம் தொட்ட காற்று மாசுப்பாடு : அவுதியுறும் மக்கள்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், மக்கள் அவதியுற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த பாதுகாப்பான வரம்பை விட குறைந்தது 30-35 மடங்கு மாசு அளவுகளை டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான குளிர்கால மாதங்களில் வெப்பநிலை, புகை, தூசி, குறைந்த காற்றின் வேகம், வாகன உமிழ்வுகள் மற்றும் பயிர்களின் மரக்கட்டைகள் எரிதல் போன்றவற்றால் டெல்லி மற்றும் வட மாநிலங்கள் அபாயகரமான காற்றுடன் போராடுகின்றன.
இம்முறை, எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிஸ் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (ஏக்யுஐ) கண்காணிப்பு அமைப்பின்படி, டெல்லியின் பல பகுதிகளில் இன்று (13.11) மாசு அளவு 500 தொட்டதாக கூறப்படுகிறது.