கொழும்பிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி – மனைவி பலி

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, லொறியுடன் இன்று பிற்பகல் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
பெத்தேவத்தை, மித்தெனிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சம்பிகா உதயங்கனி என்ற 34 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான குடும்பத்தினர் பிலியந்தலை பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் எனவும் பொதுத் தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக கிராமத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
(Visited 46 times, 1 visits today)