இலங்கை: பாடசாலை பரீட்சசைத் தாளில் அரசியல் கட்சி கேள்விகள் குறித்து கல்வி அமைச்சகம் விசாரணை
களுத்துறையிலுள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் தொடர்பான கேள்விகள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணை நடத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள CWW கன்னங்கர மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்களின் இரண்டாம் தவணை பொது அறிவுப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் தொடர்பான வினாக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் வினாத்தாள் பாடசாலை அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது அமைச்சு அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலும் இணைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்ட பின்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.




