கொழும்பில் நடந்த சோகம் – தந்தையின் வாகனம் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

மருதானை – புகையிரத ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியில் சிறு குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளது.
ஜீப் ஒன்று வீடொன்றுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருதானை பகுதியில் உள்ள புகையிரத வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 3 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று பிற்பகல் வீட்டுக்கு அருகில் ஜீப் வாகனத்தை நிறுத்துவதற்கு தந்தை பின்பக்கத்திற்கு வாகனத்தை செலுத்திய வேளையில், பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 33 times, 1 visits today)