செய்தி வாழ்வியல்

மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் சில ஆபத்தான உணவுகள்

கடந்த சில காலங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளை அதிகம் கேட்கிறோம். அதிலும் மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன.

இதற்கான மிக முக்கிய காரணம், நம் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர். மாரடைப்பு பாதிப்பு நமக்கு ஏற்படாமல் தடுக்க, பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், சரியான உணவு தேர்வு.

இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். மாரடைப்புக்கு காரணம் இதய தமனிகளில் சேரும் அதிக கொலஸ்ட்ரால், கொழுப்பு. சில நேரங்களில் கொழுப்பு உறைந்து நரம்புகளில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதனால், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தையும் ஆக்ஸிஜனைக் கடத்தும் பணி பாதிக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் தடைபடுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.

நமது பழக்கவழக்கங்கள் இதயத்தை பலவீனப்படுத்துகின்றன (Heart Health). நாம் சரியான உணவை தேர்வு செய்யாவிட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், இதயத்தின் எதிரிகள் என்று அழைக்கப்படும் சில உணவுகள் எவை என்பதை எடுத்துக் கூறுகிறார். இவற்றை எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், இவற்றை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், மாரடைப்பு அபாயம் பெருமளவு அதிகரிக்கிறது

See also  சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை குறித்து நாசா வெளியிட்ட அறிக்கை

இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்

சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள்

ஐஸ்க்ரிம், கேக் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் பாதிக்கும்

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான ஆதாரம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும், எனவே அதன் அளவைக் குறைப்பது முக்கியம்.

குளிர் பானங்கள்

குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் சோடா சேர்த்த குளிர் பானங்களையும், செயற்கை பானங்களையும் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். ஆனால் அதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது. இது இதய நோயை ஏற்படுத்தும்.

பொரித்த உணவுகள்

பொரித்த உணவு உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அதில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது, இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

உப்பு நிறைந்த உணவுகள்

சிப்ஸ் மற்றும் பிரஞ்சு பிரைஸ் உள்ளிட்ட பல உணவுகளில் அதிக அளவு உப்பு உள்ளது. சோடியம் அதிகம் உள்ள இவற்றை தினமும் உட்கொண்டால் இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை உண்டாக்கும்.

See also  காசா மீதான மத்தியஸ்த பேச்சுவார்த்தை முயற்சிகளை இடைநிறுத்திய கத்தார்

மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவரது அனைத்து ஆலோசனைகளைபின்பற்றவும். உணவில் மாற்றங்களைச் செய்வதும் அவசியம். . மேலும் கொல்ஸ்ட்ராலை எரிக்கும் உணவுகளை டயட்டில் தவறாமல் சேர்த்துக் கொள்வதால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். நல்ல தூக்கமும்ம் மிக அவசியம். அதோடு, உங்களால முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை பெறுமளவு குறைக்கலாம்

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content