நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகின்றது. சென்னை – ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமானார்.
இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பணியை துறந்தார். நாடகங்களிலும் நடித்துள்ளார்.
குணச்சித்திர வேடம், நகைச்சுவை, வில்லனாகவும் நடித்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்.
(Visited 17 times, 1 visits today)