இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் இளைஞர் கைது!

போலியான விசாவை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞரை குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமான E-1196 இல் இந்தியாவின் சென்னைக்கு செல்லவிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாக சந்தேகநபரிடம் இருந்து போலியான பிரெஞ்சு வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் வெல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் மேலதிக விசாரணைக்காக எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்