மீண்டும் ஜனாதிபதியாக தெரிவான ட்ரம்ப் : கனடா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை!
கனடா-அமெரிக்க உறவுகளுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழுவை மீண்டும் நிறுவ உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார், இதில் வெளியுறவு, பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் உட்பட மற்ற உயர் அதிகாரிகளும் உள்ளடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவைக் குழு கனடாவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் என ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வர்த்தகத்தை சார்ந்து இருக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாகும், மேலும் கனடாவின் ஏற்றுமதியில் 75% அமெரிக்காவிற்கு செல்கிறது.