பிலிப்பைன்ஸை தாக்கும் வலுவான சூறாவளி : தயார் நிலையில் மீட்பு குழுக்கள்!
ஒரு வலுவான சூறாவளி வடக்கு பிலிப்பைன்ஸைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த சூறாவளிக்கு மார்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இது பிலிப்பைன்ஸை தாக்கும் 13 ஆவது சூறாவளியாகும்.
பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் அவசரகால தங்குமிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர்-பரிவர்த்தனை குழுக்கள் எச்சரிக்கையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல்படை, ராணுவம், விமானப்படை மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வடக்கு மாகாணங்களில் தீவுகளுக்கு இடையேயான படகுகள் மற்றும் சரக்கு சேவைகள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)