டிக்டொக் சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
டிக்டொக் சமூக ஊடக பயன்பாட்டிற்குப் பின்னால் உள்ள சீன நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வுக்குப் பிறகு அதன் கனேடிய வணிகத்தை கலைக்க உத்தரவிடுவதாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இருப்பினும் அணுகலை தடுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “டிக்டோக் பயன்பாட்டிற்கான கனடியர்களின் அணுகலையோ அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கும் திறனையோ அரசாங்கம் தடுக்கவில்லை.
சமூக ஊடக பயன்பாடு அல்லது தளத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு தனிப்பட்ட விருப்பமாகும்” என்று தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் கூறியுள்ளார்.
கனேடியர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது உட்பட நல்ல இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கும் முதலீட்டு கனடா சட்டத்தின்படி கலைப்பு உத்தரவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.