பிரித்தானியாவில் தற்கொலை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்!
லண்டனில் தற்கொலை நோய்” என்று அழைக்கப்படும் மிகவும் அரிதான நோயால் இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிஸ்டவசமாக அந்த நோயிக்கு எவ்வித சிகிச்சையும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
21 வயதான சார்லி மூர் என்ற இளைஞர் உடலின் வலது பக்கம் வீக்கமடைந்ததால் வைத்தியர்களை நாடியுள்ளார்.
அவர் இரண்டு வருடங்களில் ஏறக்குறைய 10 முறை A&E க்கு விஜயம் செய்தார், மருத்துவர்களிடம் நோயறிதலைக் கோரினார், ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சார்லி இறுதியில் சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) நோயால் கண்டறியப்பட்டார். கடந்த இரண்டு வாரங்களில் கைகள், கால்களில் வலிநிலை ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
இதனையடுத்து வைத்தியர்கள் இந்த நோயிற்கு தற்கொலை நோய் என பெயரிட்டுள்ளனர். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித சிகிச்சையும் இன்றி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
“அனைத்து தசைகளும் பிடிப்புக்கு ஆளாகும்போது ஒன்றையொன்று இழுக்கின்றன. வலி உங்கள் தசைகளை மிகவும் கடினமாக இறுக்குவது போல் உணர்கிறது, அவை உள்ளிருந்து திறக்கப் போவது போல் உணர்கின்றன என இந்த நோய் குறித்து பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் தெரிவித்துள்ளார்.