இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

போரை நிறுத்துவதற்காகவே கடவுள் எனது உயிரை காப்பாற்றியுள்ளார் – ட்ரம்ப்!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தான் போரை நிறுத்தப்போவதாகவும் கடவுள் அதற்காகவே தனது உயிரை காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது முந்தைய  ஜனாதிபதி காலம் பற்றி பேசிய அவர், அப்போது நாட்டில் போர்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றம் |ISIS அமைப்பை தோற்கடித்ததை தவிர பயங்கரவாத செயல்கள் இருக்கவிலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது “ஜனநாயகம்” மற்றும் “சுதந்திரம்” ஆகியவற்றுக்கான மிகப்பெரிய வெற்றி எனவும் அமெரிக்காவின் புகழ்பெற்ற விதியைத் திறக்கப் போகிறோம், எங்கள் மக்களுக்கு மிகவும் நம்பமுடியாத எதிர்காலத்தை நாங்கள் அடையப் போகிறோம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் நடந்த ஒரு படுகொலை முயற்சிக்குப் பிறகு, “கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார்” என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய டிரம்ப், “எப்போதும் இல்லாததை விட” அமெரிக்காவை சிறந்ததாக்குவேன் என உறுதியளித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட பிளவுகளை எங்களுக்குப் பின்னால் வைக்க வேண்டிய நேரம் இது, இது ஒன்றுபடுவதற்கான நேரம், நாங்கள் முயற்சி செய்யப் போகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!