உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல இலங்கை உதவ வேண்டும்..
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியிருப்பதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கடினமாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாலுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி பைனலுக்கு செல்ல முடியும்.
ஆனால் போட்டி நடைபெறுவது ஆஸ்திரேலிய மண்ணில் என்பதால் இந்தியா அங்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அது மிகப்பெரிய சாதனையாக தான் பார்க்கப்படும்.
இந்த தருணத்தில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது முடியாத காரியமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சில உதவிகள் மற்ற அணிகளிடமிருந்து கிடைத்தால் குறைந்தது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணியால் பைனலுக்கு செல்ல முடியும்.
அது எப்படி என்று தற்போது பார்க்கலாம்.
இந்திய அணி இரண்டுக்கு ஒன்று அல்லது மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற வேண்டும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் இனி நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது.
இதில் இங்கிலாந்த அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் அல்லது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பறிபோகிவிடும்.
இதைப் போன்று இந்தியாவுக்கு தற்போது ஆபத்தாக இருப்பது தென்னாபிரிக்க அணி தான்.
தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராகவும் தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்த நான்கு போட்டிகளில் தென்னாபிரிக்க அணி குறைந்த பட்சம் இரண்டு போட்டிகள் ஆவது தோற்க வேண்டும். அல்லது சமன் ஆவது செய்ய வேண்டும்.
இதனால், பாகிஸ்தான் அல்லது இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு போட்டியில் ஆவது தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மன்னன் வீழ்த்த வேண்டும்.
இப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி பைனலுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் இரண்டிலும் ஆஸ்திரேலியாவோ அல்லது ஒன்றில் இலங்கையோ வெற்றி பெற வேண்டும்.