இலங்கை: இரட்டை குடியுரிமை சர்ச்சை- திலித் ஜயவீரவுக்கு சவால் விடுத்துள்ள திலகரட்ன டில்ஷான்
ஐக்கிய ஜனநாயக குரல் (UDV) வேட்பாளர் திலகரட்ன டில்ஷான், முன்னாள் கிரிக்கெட் வீரர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற தனது கூற்றை நிரூபிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு சவால் விடுத்துள்ளார்.
தனது குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கியதற்காக திலித் ஜயவீரவை கடுமையாக சாடிய திலகரத்ன டில்ஷான், ஜயவீர தனது கூற்றுக்களை நிரூபிக்க முடிந்தால், தனது தேர்தல் முயற்சியில் இருந்து விலகத் தயார் என்று கூறினார்.
எவ்வாறாயினும், ஜயவீர அவ்வாறு செய்யத் தவறினால், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் உறுதியளிக்க வேண்டும் என்றார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகரத்ன டில்ஷான், இதற்கு முன்னர் ஜயவீர தனது அரசியல் கட்சியில் இணைவதற்கான அழைப்பை விடுத்த போது அவரது குடியுரிமை குறித்து அவருக்கு தெரியாமல் இருந்ததா என மேலும் கேள்வி எழுப்பினார்.
“ஜயவீர என்னை அவரது கட்சியில் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட அழைத்தார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேறு பூசும் பழைய அரசியல் கலாசாரத்தையே நாம் இன்னும் பின்பற்றுவது வருத்தமளிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர், சிலர் புதியவர்களுக்கு பயந்து சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொள்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.