இலங்கை – நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு : தாழ்நிலங்களில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.
கலா ஓயாவிற்கு வினாடிக்கு 1750 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே கலா ஓயாவை சூழவுள்ள தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு ராஜாங்கனை நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாலையில் மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால், இரவு நேரத்தில் அதிக மதகுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
(Visited 19 times, 1 visits today)