UKவில் பிரமாண்டமாக இடம்பெறும் நெருப்பு திருவிழா : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் பிரமாண்டமாக இடம்பெறும் நெருப்பு இரவு விழாக்களை ‘The Bonfire Night capital of the world’ கண்டு மகிழ பல்லாயிர கணக்கானோர் தலைநகரில் ஒன்றுக்கூடுவது வழமை.
இந்நிலையில் இவ்வருடம் மக்கள் தலைநருக்கு வருவதற்கு பதிலாக உள்ளுர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
1606 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 05 ஆம் திகதி இந்த நெருப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும், 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுக்கூடும் இவ்விழாவில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்வர். அது மாத்திரம் இல்லாமல் உருவ பொம்மைகளும் எரிக்கப்படும்.
இவ்வருடம் இடம்பெற்றும் விழாவில் சசெக்ஸ் காவல்துறை நாடு முழுவதிலும் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறது.
குறுகிய தெருக்களில் தனிநபர்கள் நெருப்புடன் நடந்து செல்வதைப் பற்றி கவலைப்பட்ட அதிகாரிகள், உள்ளூர் அல்லாதவர்களை வீட்டிலேயே தங்கி தங்கள் சொந்த பகுதிகளில் இடம்பெறும் விழாவில் கலந்துகொள்ளுமாறு எச்சரித்துள்ளனர்.