ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் அகதிகள் தொடர்பில் புதிய நடைமுறை!
ஜெர்மனி நாட்டிற்கு வரும் அகதிகளை ஜெர்மனி நாட்டின் எல்லையில் வைத்து விசாரணை நடத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
ஜெர்மனியின் மத்திய உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் மாநில உள்ளுராட்சி அமைச்சர்களிடையே வருகின்ற 10.5.2023 அன்று ஒரு சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பின் பொழுது தற்பொழுது ஜெர்மன் நாட்டில் பல லட்சக்கணக்கான அகதிகள் வருகின்ற விடயங்கள் மேலும் அகதிகளுக்கு தங்குமிட வசதிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
இந்நிலையில் இந்த சந்திப்பானது 10ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நிலையில் மத்திய உள்ளுராட்சி அமைச்சர் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்கள். அதாவது அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ஒரு இணக்கப்பாடு காணக் கூடிய சூழ்நிலை உள்ளது.
ஐரோப்பாவில் எல்லையில் வருகின்ற அகதிகளின் விண்ணப்பங்களை எல்லையில் விசாரணை செய்ய வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகையான ஒரு சிந்தைனைக்கு மற்றைய ஐரோப்பிய நாடுகளும் ஒத்துழைக்ககூடிய வாய்ப்பு உள்ளதாகவும் இந்நிலையில் வெளி எல்லைகளில் வைத்து அகதிகளை விசாரிக்கும் காலமானது 12 மாதமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.