114 மைல் வேகத்தில் வீசிய காற்று : தைவானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!
தைவானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியை தொடர்ந்து தலைநகர் தைபே பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காங்-ரே சூறாவளி இன்று தைவானில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக தீவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடக்குப் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 114 மைல் வேகத்தில் காற்று வீசியதால் 8,600 பேர் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யிலான் மற்றும் ஹுவாலியன் மாவட்டங்களின் சில பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆனால் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பல விவசாயிகள் புயலால் ஏற்படும் சேதத்தை எதிர்பார்த்து தங்கள் பயிர்களை ஏற்கனவே அறுவடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.