ரஷ்யாவில் கூகுள் நிறவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட அபராத தொகை – உலகின் மொத்த ஜிடிபியை விட அதிகம்!
ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு இரண்டு அன்டிசில்லியன் ரூபிள்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்டிசில்லியன் என்பது டிரில்லியன் மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் 110 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட உலகின் மொத்த ஜிடிபியை விட இந்த அபராத தொகை அதிகமாகும்.
கூகுளின் தற்போதைய பங்குச் சந்தை மதிப்பு $2.16 டிரில்லியன் ஆகும். எனவே எந்த நேரத்திலும் பணத்தைத் திரட்ட முடியாது எனக் கூறப்படுகிறது.
அபராதம் செலுத்தப்படாததால் அதற்கான வட்டி அதிகரித்து வருவதாகவும் ஒன்பது மாதங்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாகத் தொடங்கும் என்று மாநில செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் RBC செய்திகளின்படி, 17 ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களுக்குச் சொந்தமான YouTube கணக்குகளை Google மீட்டெடுக்காததால், இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.