ஜெர்மனியில் அமுலாகும் புதிய சட்டம் – கடவுச்சீட்டு, அடையாள அட்டை தொடர்பில் முக்கிய தகவல்
ஜெர்மனியில் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய, முதலாம் திகதி முதல் ஒருவர் கடவுச்சீட்டை அல்லது தனது அடையாள அட்டையையை ஜெர்மனியின் அலுவலகத்தில் இருந்து பெறுவதாயின் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு அத்தாட்சி பத்திரம் அல்லது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடவுச்சீட்டுக்கு அல்லது அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்கின்வர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமலே கடிதம் மூலமாக இந்த குறித்த சீட்டை தமக்கு அனுப்புமோறு கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும்.
எனினும் இந்த நடவடிக்கைக்கு மேலதிகமான பணம் அறிவிடப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் ஒருவர் தனது பாலினத்தை பதிவு செய்வது தொடர்பில் அதாவது ஒருவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் பொழுது இதுவரை காலமும் நீதி மன்றத்தின் முடிவுகளின் மூலம் மாற்றி விண்ணப்பத்தை பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும்.
முதலாம் திகதியிலிருந்து பாலியல் மாற்றங்கள் தொடர்புடைய விடயத்தை தானாகவே பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் தங்களது முதற் பெயரையும் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.